அருள்மிகு பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி
அருள்மிகு பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி
அருள்மிகு பகவதி அம்மன் கோவில்,கன்னியாகுமரி

வரலாறு

திருக்கோயில் தோன்றி காலம் உத்தேசம் 2000 - ம் ஆண்டுகள் இருக்கும் என்று எண்ணப்படுகிறது. இங்கு தோன்றி இருக்கும் ஸ்ரீ முருகப் பெருமானின் ( உருவச் சிலை ) உயரம் 8 அடி 6 அங்குலம் முருகப் பெருமானின் இடப்பக்கம் வள்ளியம்மையின் உருவச் சிலை 6 அடி 8 அங்குலம் உள்ளது.

இத்திருக்கோயிலில் வள்ளித் திருமணம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தேவஸ்தானத்தின் பக்கத்தில் வேளி மலை என்று அழைக்கப்படும் மிகப் பெரிய மலை ஒன்று உள்ளது. அதில் வள்ளி நாயகியின் குடும்ப பாரம்பரியம் உள்ள வேடுவர் இனத்தவர் வாழ்ந்து வருகின்றனர். மேலும் வள்ளி நாயகி காத்த தினை புனம் ( வள்ளிச் சோலை , வட்டச் சோலை ) முதலியவையும் முருகப் பெருமானை கிழவனாக காட்சியளித்த கிழவன் சோலை ஆகியவையும் முருகப் பெருமானும், வள்ளியும் குளித்த குளம் ( சுனை ) அடங்கியதும் முருகப் பெருமானுக்கு திருமணம் நடத்தி வைத்த கணபதி கல்யாண வினாயகரகவும் தோன்றியதும் இத் திருக்கோயிலின் சிறப்பு அம்சம் ஆகும். இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் ( சரியாக ஆங்கில ஆண்டு மார்ச் , ஏப்ரல் ) அனுஷ நட்சத்திரத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இத்திருக்கோயில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. 01 - 11 - 1956 - ம் ஆண்டு தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இத்திருக்கோயிலில் இது போன்ற வைபவம் நடைபெறுவதால் அதற்கு உரிய அத்தாட்சி (கல்வெட்டுக்கள்) இருப்பதாலும் இதை திருவேரகம் என்று அழைக்கின்றனர்.

ஸ்ரீ முருகப் பெருமான் வேங்கை மரமாகி நின்ற வேங்கை மரம் ஸ்தல விருட்சமாக காணப்படுகிறது. முருகப் பெருமான் வள்ளி நாயகியை திருமணம் செய்ய வள்ளி நாயகியின் குடும்பத்தவர் தடங்கலாக இருந்து இரு இனத்தவருக்கும் போர் நடந்ததாகவும் அதில் முருகப் பெருமானின் ஆட்கள் வேடுவரை யுத்தத்தில் வீழ்த்தியதை குறிக்கும் குறவர் படுகளம் என்ற முக்கிய சம்பவமும் நடைபெற்று வருகிறது.

இப்பேர் பெற்ற இடமாகிய வேளிமலை முருகப் பெருமான் வீற்றிருக்கும் குமாரகோயில் திருவேரகம் என்று அழைக்கப்பட்டு முருகப் பெருமான் அருள் பாலித்து வரும் இடம்.

இதர சேவைகள்

நன்கொடை

Donate Now

அன்னதானம்

Donate Now

பூஜை

Viewing

திருப்பணி

Booking Now

திருக்கோவில்கள்