அருள்மிகு பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு
அருள்மிகு பகவதி அம்மன் கோவில்,மண்டைக்காடு
அருள்மிகு பகவதி அம்மன் கோவில்,மண்டைக்காடு

வரலாறு

மண்டைக்காடு சரித்திரப் பிரசித்தமான குளச்சல் துறையிலிருந்து சுமார் இரண்டு மைல்கள் தெற்காக, கடற்கரை ஓரத்தில் இருக்கும் சிற்றூராகும். புகழார்ந்த பகவதியம்மன் கோவில் இவ்வூரின் நடுவிலிருக்கிறது. ஆண்டுதோறும் மாசி மாதம் இக்கோவிலில் நடைபெறும் "கொடை விழா" விற்கு இலட்சக் கணக்கில் மக்கள் கூடுவார்கள். குறிப்பாக கேரளத்தில் இருந்து வரும் பக்தர்கள் 41 நாட்கள் விரதம், இருந்து கால்நடையாக இங்கு வருவார்கள். தேவியின் திருநாமத்தை கூவியழைத்தவாறு, கைகளில் நேர்ச்சைக் கொடியும் தாங்கி ஆண்களும், பெண்களும், முதியோர்களும், சிறுவர்களும் கூட்டம் கூட்டமாக வருவதைக் காணும் போது பார்ப்பவர்களுக்கும் பக்திப் பரவசமேற்படும். மாசி மாதம் கடைசி செவ்வாயன்று நடைபெறும் கொடை விழாவிற்கும், அதற்கு முந்திய வெள்ளியன்று நடைபெறும் வலிய படுக்கைக்கு மாபெரும் கூட்டமிருக்கும். கொடை தினத்தன்று இரவில் நடைபெறும் ஒடுக்கு பூஜை மிகவும் முக்கியமாகும்.

தேவியின் சிலை மண்புற்றால் ஆனதாகும். இச்சிலை வருடந்தோறும் வளர்ந்துகொண்டே இருப்பதாக மக்களால் நம்பப்படுகிறது. முற்காலத்தில் இப்பகுதி புற்கள் மண்டிய மந்தைவெளியாக இருந்ததாகவும், ஆடு, மாடுகள் மேய்த்த பையன்களில் ஒருவன் ஒருநாள் புல் செதுக்கும் போது ஓரிடத்தில் இரத்தம் கசிந்ததாகவும், அதனைக் கண்டு பயந்த சிறுவன் ஊருக்குத் தெரிவிக்க அவர்கள் வந்து பார்த்து அவ்விடத்தில் மண்மேடு குவித்து வழிபட்டதாகவும், அதுவே இன்றைய கோவிலாக உருப்பெற்றதாகவும் வழங்கப்படுகிறது. மாசி மாதம் 10 நாட்கள் வெகு விமரிசையாக மாசி திருவிழா நடைபெறும். இங்கு திருவிழா நட்சத்திர முறைப்படி நடைபெறுவதில்லை. மாத கடைசி செவ்வாய் கணக்கில் கொள்ளப்பட்டு 10 - ம் நாள் திருவிழா நடைபெறும். இதில் திருக்கொடியேற்று ஞாயிற்றுக் கிழமையும் மகா வலிய படுக்க பூஜை 6 - ம் திருவிழாவாகிய வெள்ளிக்கிழமையும் மஹா ஒடுக்கு பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

இதர சேவைகள்

நன்கொடை

Donate Now

அன்னதானம்

Donate Now

பூஜை

Viewing

திருப்பணி

Booking Now

List of Temples