அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில், திருவட்டாறு
அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில், திருவட்டாறு
அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில்,திருவட்டாறு

வரலாறு

இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட புறநானூறு என்னும் சங்கத் தமிழ் இலக்கியத்தில் திருவட்டாறு ஊர் பற்றிய குறிப்பு வருகிறது. கி.பி. 9 ஆம் நூற்றாண்டு நம்மாழ்வார் இவ்வூரில் நிலை பெற்ற பெருமானை "வாட்டற்றன்" கேசவன் என்கிறார்.

முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு உட்பட 45க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன. இக்கோவில் சோழர்கள், வேணாட்டு அரசர்கள், திருவிதாங்கூர் அரசர்கள் ஆகிய மூன்று மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவிலின் உண்ணாழியைச் சுற்றி அமைந்துள்ள திருசுற்று மாளிகை, தஞ்சை பெரிய கோயில் திருசுற்று மாளிகை பாணியில் சிறிய அளவில் அமைந்து சோழர் கலைப் பணியை நினைவூட்டுகிறது.

இத்திருத்தலத்தைச் சுற்றியோடும் ஆற்றின் நடுவே 18படிகளின் மேல் அமைந்த பூமி அரங்கத்தில் 3 ஏக்கர் ௨௧ செண்டு நிலப்பரப்பில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கேரளப் பாணி கலந்து உருவாக்கப்பட்ட இக்கோவிலில் நான்கு வெளிப்பிரகாரங்களிலும் 224 தூண்களில் பாவை விளக்குகள் உள்ளன. இப்பாவை விளக்குகள் தீப லட்சுமி என அழைக்கப்படும். இவற்றில் ஒன்றிலிருந்து இன்னொன்று வேறுபட்டது இதன் சிறப்பு. இந்த தூண்களில் 2300 சிற்பங்களுக்கு மேல் உள்ளன. பிரகாரம் 80 மீட்டர் நீளமுடையது. இதன் அகலம் 6.10 மீட்டர்.

இக்கோவிலின் ஸ்ரீபலி மண்டபத்திலும் நாலம்பலத்திலும் அபூர்வமான சிற்பங்கள் உள்ளன. ஸ்ரீபலி மண்டபம் 13.15 மீட்டர் நீளமும் 12.40 மீட்டர் அகலமும் உள்ளது. நாலம்பலம் 42.50 நீளமும் 36.50 அகலமும் உடையது.

புராண இதிகாச காட்சிகளை விவரிக்கும் மிக அற்புதமான மரச் சிற்பங்கள், ஒற்றைக்கல் மண்டபம், உதய மார்த்தாண்ட நமஸ்கார மண்டபம் மற்றும் சாஸ்தா கோவில் முன் மண்டப விதானங்களை அலங்கரிக்கும். கருவறையின் எதிரே உள்ள 18அடி "18அடி" 1 அடி அளவில் ஒரே கல்லால் ஆன ஒற்றைக்கல் 12ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது.

கோவில் கருவறைத் தெய்வம் 22அடி (6.60 மீட்டர்) நீளமுடையது. பாம்பணை மேல் பள்ளி கொண்ட மூலவர் 16008 சாளக் கிராமம் உள்ளடங்கிய கடு சக்கரைப் படிமம் ஆகும். ஆதி கேசவன் மேற்கு நோக்கிப் பள்ளி கொண்டுள்ளார். அவரது நாபியில் பிரம்மா இல்லை. ஸ்ரீ கோயில் அற்புத விமானம், வகையைச் சார்ந்தது. செம்பு தகட்டால் வேயப்பட்டது. இதில் தங்க மூலம் பூசப்பட்ட ஐந்து கலசங்கள் உள்ளன.

விளக்கு மாடம், ஓவியங்கள்

திருச்சுற்று மாளிகையும், வெளித் திண்ணையும் ஒட்டி லட்சத் தீபம் என்று அழைக்கப்படும் சிறு செம்பு, பித்தளை விளக்குகள் பல வரிசைகளாக உள்ளன. விளக்கு மாடம் வெளிப் பிரகாரத்தை நோக்கி அமைந்துள்ளது. உண்ணாழியின் வெளிச்சுவரில் பல பச்சிலை ஓவியங்கள் தீடப்பட்டுள்ளன.

திருவம்பாடி கோவில்

கோவிலின் மேற்கு பிரகாரத்தின் வடமேற்கில் திருவம்பாடி கோவில் உள்ளது. இது கிழக்கு நோக்கிய சன்னதி இதன் விமானம் திராவிட பாணியிலானது. இக்கோவிலின் கருவறைத் தெய்வமான வேணுகோபாலன் கல்லால் ஆனது. இடது கால் நேராகவும், வலது கால் வளைந்து ஸ்வஸ்தி காசனமாக புல்லாங்குழலை இரு கைகளால் ஏந்தி நிற்கிறார்.

சாஸ்தா

தெற்கு பிரகாரத்திற்கும், தெற்கு விளக்கு மாடத்திற்கும் இடையில் சாஸ்தா கோவில் உள்ளது. சாஸ்தா உத்குடி காசனத்தில் இருக்கிறார். வலது கை சின் முத்திரையும், இடது கை பூஸ் பரிச முத்திரையும் ஜடாபாரமுமாக காட்சியளிக்கிறார்.

கோயில் பூந்தோட்டத்திலுள்ள நாகப்பூவை நாகராஜாவின் உருவக் குறியீடாகக் கருதுகின்றனர். கோவிலையும் அதனைச் சார்ந்த தோட்டங்களையும் நாகங்கள் காவல் புரிகின்றன என்பது ஐதீகம். கோயிலைச் சுற்றிலும் நாகப்பாம்புகள் நிறைந்திருந்தாலும் இவ்வட்டாரத்தில் பாம்பு கடித்து இறந்ததாக சான்றுகள் எதுவும் இதுவரை கிடையாது. இச்சிறப்பினை உலக மதங்களின் கலைக் களஞ்சியம் உறுதிப்படுத்துகின்றது. சில ஆண்டுகளுக்கு முன் இக்கோயில் குளத்தினருகே இரண்டு தலை நாகமொன்று கிடைத்தது குறிப்பிட வேண்டியது. இக்கோயிலைச் சூழ்ந்துள்ள நாகச் சிலைக்கு கணக்கே கிடையாது. உட்கோயிலின் வாசலில் படமெடுத்த கோலத்தில் அமைந்துள்ள இரு பெரிய ஐந்து தலை நாகங்களின் சிலைகள் இங்கு வருகின்றவர்களைக் கவராமல் இருக்க முடியாது.

மூலவரான நாகராஜாவை தவிர்த்து சிவன் வாயு வடிவத்திலும் திருமால் அனந்த வடிவிலும் உள்ளனர். கோயில் தூண்களில் சமண சமயத் தீர்த்தங்கர்களான பார்சுவ நாதரும், மகா வீரரும் தவக்கோலத்தில் நின்றும் அமர்ந்தும் உள்ளனர். கோயிலின் முன் வாயிலில் நேப்பாளத்து புத்தமத விகாரத்தை நமக்கு நினைவூட்டுகின்றது. இவ்வாறு இக்கோயில் சைவம், வைஷ்ணவம், சமணம், பெளத்த மதம் இந்நான்கு மதக் கோட்பாடுகளின் கூட்டுருவமாக நமக்கு காட்சியளிக்கின்றது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மூலஸ்தானத்தின் பின்னால் தொழு நோய் போன்ற நோய்களைக் குணப்படுத்தும் ஓட வள்ளி என்ற ஒரு கொடி படர்ந்திருந்தது என்றும், நாளடைவில் அக்கொடி அழிந்துவிட்டதாகவும் அக்கொடியை திரும்ப நட்டு வளர்க்க முயற்சித்தும் இயலாது போய் விட்டதாகவும் கூறப்படுகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தவர்கள் இந்த ஓட வள்ளி இலையினை பிரசாதமாகப் பெற்று வந்ததாகவும் தெரிகிறது. ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு சுவையுடனிருக்கும் என்றும் அவர்கள் கூறக் கேட்கலாம்.

இங்குள்ள மூலஸ்தானத்தில் மேற்கூரை ஓலை வேயப்பட்டதாக இருப்பது வேறு எந்த ஆலயத்திலும் காணப்படாத தனிச்சிறப்பாகும். மேலும் நாகராஜா அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாகவேயிருப்பது குறிப்பிடத்தகது. அங்கிருந்து எடுக்கப்படும் மண்ணே முக்கியப் பிரசாதமாகும். இது ஆறு மாதம் கருப்பு நிறமாகவும் எஞ்சிய நாட்களில் வெள்ளை நிறமாகவும் இருந்து வருகிறது. எவ்வளவோ காலமாக எடுத்தும் அந்த மண் குறையாமலிருப்பது அதிசயக்கத் தக்க பேருண்மையாகும். நாகராஜனை வணங்குகின்றவர்கள் நோய் நொடியின்றி நலமெல்லாம் பெற்று வாழ்வர் என்பதும், மருந்துகளால் குணப்படுத்த முடியாத சில சரும ரோமங்களை நாகராஜனைத் தினமும் தொழுவதால் மறைந்து போகிறது என்பதும் இங்குள்ளோர் நம்பிக்கை. இக்கோயிலுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் திரள் திரளாக வந்து வணங்கி செல்கின்றனர். ஞாயிற்றுக் கிழமை நாகராஜனுக்கு பால் வார்ப்பது புனிதமாக கருதப்படுகிறது. ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் இவ்வாலயம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும் அந்நாட்களில் சுற்று வட்டாரத்திலுள்ள மக்கள் இங்கு வந்து பால், உப்பு, நல்ல மிளகு, மரபொம்மைகள், இவைகளைக் காணிக்கைகளாக கொண்டு வந்து நாகராஜனை பயபக்தியுடன் வணங்கி செல்வர். பிற மதத்தவர்களும் இங்கு காணிக்கை செலுத்துவதுண்டு. நாக தோஷங்களை ஒழிக்க இது ஒரு புண்ணிய இடமாக விளங்குகின்றது.

இக்கோயில் வேறுபட்ட நான்கு மதக் கோட்பாடுகளை ஒன்று சேர்க்கும் சின்னமாகத் திகழ்கிறது. தற்போது இம்மாநிலத்திலிருந்து மட்டுமின்றி பாரத நாட்டின் பல பகுதியிலிருந்தும் மக்கள் திரள் திரளாக வந்து தங்கள் குறைகளைத் தீர்த்து கொள்ளும் திவ்ய ஸ்தலமாக இது விளங்குகின்றது. இவ்வாறு வணங்கி செல்வோர் எல்லா நலங்களும் பெற்று மன அமைதியுடன் வாழ்கின்ற காரணத்தால் இவ்வாலயத்தின் புகழ் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மக்கள் மேலும் மேலும் வந்து குவிகின்றனர்.

இதர சேவைகள்

நன்கொடை

Donate Now

அன்னதானம்

Donate Now

பூஜை

Viewing

திருப்பணி

Booking Now

திருக்கோவில்கள்