அருள்மிகு தாணுமலையான் கோவில், சுசீந்தரம்
அருள்மிகு தாணுமலையான் கோவில், சுசீந்தரம்
அருள்மிகு தாணுமலையான் கோவில்,சுசீந்தரம்

வரலாறு

பழையாற்றின் கரையில் ஓங்கியுயர்ந்த 7 அடுக்கு கோபுரத்துடன் தாணுமாலையன் ஆலயம் காட்சி தருகின்றது தாணு-சிவன், மால்-விஷ்ணு, அயன்-பிரம்மா இம்மூவரும் ஒருவரோடொருவர் பின்னிப் பிணைந்துள்ள ஒருவரே தாணுமாலையன் என்பது தெளிந்த கருத்து.

"அத்திரி " முனிவருக்கு, கற்பில் சிறந்த மனைவியான அனுசுயாவுக்கு, ஞானாரன்யத்தில் மும்மூர்த்திகளும் லிங்க வடிவில் தோற்றமளித்தனர்" என்று புராணம் கூறுகிறது.

மூலவரான லிங்கத்தின்

மேல் பாகம் - விஷ்ணு.

நடுப்பாகம் - சிவன்.

அடிப்பாகம் - பிரம்மா.

என கருதப்படுகிறது.

இந்திரன் இங்கு வந்து புனிதமடைந்ததால் இவ்வூர் சுசீந்திரம் எனப் பெயர் பெற்றது. "சுசி" என்றால் புனிதம் (சுத்தம்) இந்திரன் சுத்தம் அடைந்த இடம் என்பதால் (சுசி + இந்திரன்) சுசீந்திரம் எனப் பெயர் வந்தது. இன்றும் தாணுமாலையனுக்கு அர்த்தசாம பூஜையை இந்திரன் நடத்துவதாக ஐதீகம். மேலும் இத்திருக்கோயிலில் மாலையில் பூஜை செய்தவரை அடுத்த நாள் காலை பூஜை செய்ய அனுமதிப்பதில்லை. உள்ளே எதுவும் மாறுதல்கள் கண்டால் அதை பிறரிடம் வெளியிடக்கூடாது என்ற ஐதீகப்படி அகம் கண்டதை புறம் கூறக்கூடாது என்ற நியதி கடைபிடிக்கப்படுகிறது.

இத்திருக்கோயிலின் திருக்கோபுரம் 7 அடுக்கு கொண்டது. தொலைவில் இருந்தே நம்மை வரவேற்கும் இக்கோபுரம் ஏராளமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்ததும் இராமாயணம், மகாபாரதக் கதைகளை பச்சிலை சாறுகளைக் கொண்டு கண்ணைக் கவரும் வண்ணம் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது காணற்கரியதாகும்.

இத்திருக்கோயிலில் வசந்தோற்சவத்தின் போது நீரால் சூழப்பட்ட இம்மேடையில் சுசீந்திரம் பெருமாள் உமையுடன் கொலு வீற்றிருப்பார். மண்டபத்தில் மேல் 12 ராசிகளும், நவகிரகங்களும் அமைந்திருப்பது இத்திருக்கோயிலின் தனிச் சிறப்பு. வசந்த மண்டபத்தின் பின்புறம் நீலகண்ட வினாயகர் தனது மனைவியை மடியில் அமர்த்தியிருக்கும் காட்சி குறிப்பிடத்தக்கது.

இராமேசுவரத்திற்கு அடுத்தப்படியாக தென்னிந்தியாவின் மிகப் பெரிய பிரகாரமும், பிரகாரத்தின் இருமங்கும் உள்ள தூண்களில் விளக்கேந்திய பாவை சிலைகளும், யாளிகளும் செதுக்கப்பட்டுள்ளது கண் கொள்ளாக் காட்சியாகும். வடக்கு பிரகாரத்தில் நுணுக்கம் நிறைந்த வேலைப்பாடுகள் கூடிய இசைத் தூண்கள் 24 தூண்களும், தென்புறம் 32 தூண்களும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தட்டினால் சப்த ஸ்வரங்களைக் கேட்கலாம். கல்லிலே கலை வண்ணம் கண்டதோடு, இசை வண்ணத்தையும் நிகழ்ச்செய்வது இத்திருக்கோவிலின் அற்புதத்தையும், சிற்பக் கலையின் களஞ்சியம் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

அடுத்து குலசேகர மண்டபத்தில் உயிரோவியங்களோ என்று வியக்கத்தக்க வண்ணம் அமைந்துள்ள இரு சிற்பங்களின் கையில் உள்ள நகங்கள், சூரிய ஒளி படும்போது உயிருள்ள உடலின் நகக் கண்கள் போன்று தோற்றம் தரும். கால் புறம் முன் பாதத்தில் நரம்புகள் புடைத்து எழுந்துள்ள காட்சி உயிருள்ள உடலின் நகக் கண்கள் போன்று தோற்றம் தரும்.

சீதா பிராட்டிக்கு நம்பிக்கைக்கு வேண்டிய விஸ்வரூபம் எடுத்ததால் தன்னைத் தேடிவரும் பக்தர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து இன்றும் அருள் பாலிகின்றார்.

தஞ்சை பெரிய கோயில் நந்தியை நினைவுபடுத்தும் வண்ணம் மிகப் பெரிய வெள்ளை நந்தி உள்ளது . நந்தியின் உயரம் 12 அடி அகலம் 6 அடி நீளம் 21 அடி ஆகும்.

இத்திருக்கோவிலின் தல விருட்சமான கொன்னை மரத்தடியில் மும் மூர்த்திகள் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் லிங்க வடிவில் காணலாம். அத்திரி முனிவரின் மனைவி அனுசூயாதேவி மும்மூர்த்திகளின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்களை சிறு பிள்ளையாக்கி அமுது ஊட்டியதகாவும், பின்பு முப்பெரும் தேவியர்கள் விருப்பபடி தங்கள் கணவன்களைத் திருப்பி தந்ததாகவும் வரலாறு. எனவே மும்மூர்த்திகளும் ஒரு சேர வணங்குவதற்கு இறைவன் வாய்ப்பளித்துள்ள இடம் சுசீந்திரம் கொன்னையடி சன்னதியாகும். இப்பெருமை வேறு எந்த திருக்கோயிலுக்கும் இல்லாத சிறப்பாகும்.

இத்திருக்கோவிலில் திருமால், சிவன் இருவருக்கும் கொடிமரங்கள் உண்டு. திருவிழாக்கள் நடைபெறும். அடுத்துள்ள செண்பக ராமன் மண்டபத்தில் இராமாயண, மகாபாரதக் காட்சிகள் மற்றும் பெண் வினாயகர் விக்னேஷ்வரியையும் தரிசிக்கலாம். மேற்கு பக்கம் கருவறையில் லிங்க வடிவில் இருக்கும் மும்மூர்த்திகளையும் தரிசிக்கலாம் (தாணு, மால், அயன் மூவரும் சேர்த்து தாணுமாலையன்) திருக்கோயில் என்று பெயர் வந்தது.

சுசீந்திரம் திருக்கோயிலின் பெரும் பகுதி சேர, சோழ, பாண்டியர்களால் கட்டப்பட்டது. கொன்றையடி சன்னதி மிகவும் புராதனமானது. இங்குள்ள கொன்றை மரம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

மண்டபங்கள் பலவும் நாயக்க மன்னர் காலத்தில் கட்டப்பட்டவை ஆகும் இத்திருக்கோயில் திராவிடக் கட்டிடக் கலைக்குப் பெயர் பெற்றதுமாகும்.

அமைப்பு

மொத்த பரப்பளவு - 4 ஏக்கர்.

ராஜ கோபுரம் - 135 அடி.

பெரிய நந்தியின் உயரம் - 12 அடி.

தெற்கு பகுதி நீளம் - 301 அடி.

வடக்கு பகுதி நீளம் - 281 அடி.

மேற்கு பகுதி நீளம் - 244 அடி.

கிழக்கு பகுதி நீளம் - 183 அடி.

இதர சேவைகள்

நன்கொடை

Donate Now

அன்னதானம்

Donate Now

பூஜை

Viewing

திருப்பணி

Booking Now

திருகோவில்கள்